மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் சர்ச்சை.. மதமாற்ற புகாருக்கு உள்ளாகிய ஆசிரியை.. மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு.!
ஆறாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை, மதம் மாற வற்புறுத்துவதாக ஆசிரியை மீது மாணவி புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், தனது வகுப்பு ஆசிரியை தன்னை மதம் மாற வற்புறுத்தியதாக மாணவி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட தந்தை உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, "வகுப்பாசிரியர் குறித்து நான் மாணவிகளிடம் விசாரித்தேன்.
அப்போது அவர்கள் புகார் தெரிவித்த மாணவி வீட்டு பாடங்களை சரிவர செய்யாமல் இருந்ததால், ஆசிரியர் கண்டித்துள்ளார். மற்றபடி வேறு எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர் என்றார். மேலும், இது குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு நான் தகவல் தெரிவித்துள்ளேன்" என்றும் கூறியுள்ளார்.