மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறுபிறவி எடுத்த டிடிஎப்; அந்த ஒரு நொடி நடந்தது என்ன?.. விவரிக்கும் டிடிஎப் நண்பர்.. விபரம் உள்ளே.!
தமிழகத்தில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களிடையே தன்னை இருசக்கர வாகன பிரியர் மற்றும் சாகசங்கள் செய்வதில் வித்தகராக நிர்மாணித்து வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் தான் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை வீடியோ எடுத்து, தனது அன்பான தங்கம், குட்டி என்ற பேச்சால் பலரையும் கவர்ந்தவர். இவருக்கென இருந்த ரசிகர் கூட்டத்தால், எங்கு சென்றாலும் வழக்குகளை வழியச்சென்று வாங்கிய சம்பவமும் நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் டிடிஎப் வாசன் மும்பை பயணத்தை முடித்துக்கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய பயணத்தின்போது விபத்திற்குள்ளாகி வலது கைகளை உடைத்துக்கொண்டார். உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
BREAKING: Popular YouTuber #TTFVasan met with an accident. pic.twitter.com/3UEuasmnFg
— Manobala Vijayabalan (@ManobalaV) September 17, 2023
அவர் பயணித்தபோது திடீரென இருசக்கர வாகனம் ஒரு சக்கரத்தை தூக்கி, பின் கீழே இறங்கி நொடியில் விபத்து நடந்து முடிந்தது. வாகனத்தில் இருந்து டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகின. அவர் பின்னால் வந்துகொண்டு இருந்த கார் பயணிகளிடம் சாகசம் செய்துகாட்ட நினைத்து ஸ்டண்ட் செய்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரின் மீது 2 வழக்கும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவரின் நண்பர் அசார் கூறிய தகவலாவது, "இருவரும் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வரும்போது, நான் அவருக்கு பின்னால் 10 நிமிட இடைவெளியில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். சம்பவம் நடப்பதற்கு 5 நிமிடம் முன்பு அவர் எனக்கு மயக்கம் வருவது போல இருப்பதாக தெரிவித்தார்.
நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டே பயணித்தோம். நான் டீக்கடையில் நிறுத்து நான் வருகிறேன் என கூறி இருந்தேன். அதற்குள் விபத்து நடந்துவிட்டது. அவர் சுயநினைவை இழந்ததால், வாகனத்தின் திராட்டில் சுற்றப்பட்டு வேகம் அதிகரித்துள்ளது, பின் அடுத்த கணமே டிடிஎப் வாகனத்தை கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் கீழே இறங்கி அவரை தூக்கி வீசிவிட்டது. வாகனமும் தறிகெட்டு இயங்கி விபத்துக்குள்ளகிவிட்டது. இதுதான் நடந்தது. பொய்யான தகவலை பரப்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டார்.
சிறிய பயணத்தை மேற்கொண்டாலும் உடல் உறுப்புகளை பாதுகாக்க டிடிஎப் அணியும் தலைக்கவசம், உடற்கவசம், கைக்கவசம் போன்றவை விலையுர்ந்த தரமான பொருட்களாக இருந்ததால் அவரின் உயிரும் பாதுகாக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான காயத்துடன் அவர் உயிர் தப்பி இருக்கிறார். அவரின் உயிரை பாதுகாக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தப்பி உள்ளார்.
வெறுமனே வீடியோ பார்த்து மனதளவில் தன்னை டிடிஎப்-பாக நினைத்துக்கொண்டு பெற்றோரிடம் அடம்பிடித்து இருசக்கர வாகனத்தை வாங்கும் இளைஞர்களும், சிறார்களும் இதனை அறிவது கூட இல்லை. பாதுகாப்போடு பயணிக்கும் டிடிஎப்-க்கே இந்நிலை என்றால், தலைக்கவசம் கூட இல்லாமல் தாறுமாறாக செல்லும் நபர்களின் நிலை கவலைக்கிடம்தான். பைக்கர்கள் போல நாமும் ஆகவேண்டும் என நினைத்து சாலையில் அதனை செயல்படுத்தி விபத்தில் சிக்கி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தொடருகிறது. சிந்தித்து செயல்படுவது சாலச்சிறந்தது.