ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ.? டிடிவி தினகரன் வேதனை.!
சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மா உணவகம் பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளிட்டவற்றை கிழித்து வீதியில் எறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.வினர் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. (2/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 4, 2021
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது. தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.