மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடி போதையில் தண்டவாளத்தில் தூங்கிய 3 இடியட்ஸ்: ரெயில் மோதியதில் இருவர் பலி ஒருவர் படுகாயம்..!
தூத்துக்குடியில் குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரெயில் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெபசிங். தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மாரிமுத்து. தூத்துக்குடி பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து. நண்பர்களான 3 பேரும் நேற்றிரவு துத்துக்குடி 3-வது மைல் மேம்பாலம் அருகே குடி போதையில் ரெயில்வே தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற சரக்கு ரெயில் தண்டவாளத்தில் தூங்கியவர்களைன் மீது மோதியதில் காளியப்பன் மகன் மாரிமுத்துவும், காளிபாண்டி மகன் மாரிமுத்துவும் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூவரில் ஜெபசிங் மட்டும் பலத்த காயமடைந்ததுடன் உயிருக்கு போராடினார். இது குறித்து தகவல் அறிந்த துத்துக்குடி ரெயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஜெபசிங்கை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.