மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டூவீலர் மீது லாரி மோதி கோரவிபத்து.. குழந்தை உட்பட 4 பேர் உடல்நசுங்கி பலி.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜ். இவரின் சகோதரி இசக்கியம்மாள். இவர்கள் இருவரும் தனது தாய் சரஸ்வதி மற்றும் இசக்கியம்மாளின் இரண்டு வயது குழந்தை என நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இருந்து பாபநாசம் நோக்கி பயணம் செய்தனர்.
அப்போது அம்பாசமுத்திரம் - பாபநாசம் சாலையில் உள்ள ரயில்வே சந்திப்பு பகுதியில் கனரக லாரி ஒன்று இசக்கிராஜன் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த குழந்தை உட்பட நால்வரும் தூக்கி வீசப்பட்டனர்.
இவர்களில் இசக்கியம்மாள், சரஸ்வதி மற்றும் இரண்டு வயது குழந்தை சம்பவஇடத்திலேயே உடல்நசுங்கி இறந்துவிட, இசக்கிராஜன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில், டிப்பர் லாரியை விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் இயக்கி வந்தது தெரியவந்தது. மேலும் லாரியின் அச்சு முறிந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது தெரியவந்துள்ளது.