மக்கள் பணியே மகத்தானது... எளியோருக்கு உதவிடும் நோக்கில் உதயநிதி செய்த அசத்தல் காரியம்.!



udhayanithi help to poor people

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், கொரோனா இரண்டாவது அலையில் தமிழகத்தில் பாதிப்பு உச்சத்திற்கு சென்று உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாள்தோறும் பல பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது, தடுப்பூசி முகாம்களில் கலந்துகொள்வது என தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்தநிலையில், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்சென்னை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் அரிசி-மளிகை-காய்கறி உள்ளிட்ட தொகுப்பை நேற்று நிவாரணமாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாழங்கினார். உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "எளியோருக்கு உதவிடும் நோக்கில் இப்பணியை முன்னெடுத்த நற்பணி மன்ற தோழர்களுக்கு நன்றி". என குறிப்பிட்டுள்ளார்.