தமிழ்நாட்டில் அடுத்தது என்ன? சூடுபிடிக்க தயாராகும் இடைத்தேர்தல்; தாத்தாவின் இடத்தை நிரப்ப தயாராகும் பேரன்



udyanithi-expected-in-karunanithi-place

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரழந்து மறுநாள் அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது நமக்கு தெரிந்ததே. கருணாநிதி கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

idaitherthal

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பாணையை வெளியிட்டார். இந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என்று தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது. 

idaitherthal

மேலும் அதிமுக எம்எல்ஏ ஏ கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனே அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என்பது தெரியவந்துள்ளது.

idaitherthal

இந்நிலையில், தாத்தா கருணாநிதியின் திருவாரூர் தொகுதி பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உதயநிதி தன அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளது.

மேலும், கடந்த சில திமுக கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதிக்கு முன்வரிசை ஒதுக்கப்பட்டு வருவது இதனை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினும்  இதற்கான மறைமுக களவேலையில் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.