மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து.. 8 பேர் படுகாயம்.!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 17 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு முன்னதாக பிள்ளையார்பட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சபரிமலை புறப்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றபோது, புதுக்கோட்டை அருகில் பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவர்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணம் செய்த 8 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடையவே அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.