வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து.! ஒதுக்கீடு பெற்ற மாணவர்களின் நிலை.?



vanniyar-reservation-cancelled

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி சட்டம் இயற்றப்பட்டது.

இதனையடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வன்னியர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு எப்படி தர முடியும்? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வருடம் கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.