மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கு போதையில் பணம் கேட்டு ரகளை.. ரவுடியை சரமாரியாக குத்திய காய்கறிக்கடை உரிமையாளர்..! தரமான சம்பவம்..!
குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ரவுடியை, காய்கறி கடைக்காரர் கத்தியால் சரமாரியாக வெட்டியதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள திருவிக நகர் கே.சி.கார்டன் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன். இவர் முதல் தெருவில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தம்பி உத்திரபாண்டி.
இவரும் தனது அண்ணனின் காய்கறி கடையில் பணியாற்றி வரும் நிலையில், நேற்று மாலை திருவிக நகர் 6-வது தெருவில் வசித்து வந்த சௌந்தர் என்ற குள்ளாபாய் சிவசுப்பிரமணியனின் காய்கறி கடைக்கு சென்று குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.
அதற்கு உத்திரபாண்டி 'தங்களிடம் பணம், ஏன் அடிக்கடி வந்து பணம் கேட்டு தகராறில் ஈடுபடுகிறீர்கள்' என்று அவரிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், உத்திரபாண்டியை சௌந்தர் கடுமையாக தாக்கியுள்ளார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த சிவசுப்பிரமணியன் சௌந்தரை தடுத்து, 'எதற்காக என் தம்பியை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டுள்ளார். அப்போது கோபமுற்ற சௌந்தர், சிவசுப்பிரமணியத்தையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் ஆவேசமடைந்த சிவசுப்பிரமணியன் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சௌந்தரை சரமாரியாக வெட்டிய நிலையில், அவருக்கு கழுத்து தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக்கணட அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக திருவிக நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சௌந்தரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், சௌந்தரை கொலை செய்ய முயற்சித்ததற்காக, சிவசுப்பிரமணியனை கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.