மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் பெயரில் கற்பழிப்பு.. கொன்னு புதைச்சிடுவேன், அதுக்கு மட்டும் தான் நீ.. இராணுவ வீரர் கைது.!
21 வயது இளம்பெண்ணை காதலித்து கற்பழித்து ஏமாற்றிய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிவரம் கிராமத்தை சார்ந்தவர் சேட்டு. இவரது மகன் அஜித் குமார் (வயது 25). இவர் இராணுவ வீரராக இருந்து வருகிறார். அங்குள்ள சாத்துப்பாளையம் பகுதியை சார்ந்த 21 வயது இளம்பெண்ணும், அஜித் குமாரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இராணுவத்தில் பணியாற்றி வரும் அஜித் குமார், விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்துசெல்லும் பொது காதலியுடன் தனிமையிலும் சந்தித்து வந்துள்ளார். மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அத்துமீறியும் நடந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறைக்கு ஊருக்கு வந்த அஜித்குமாரிடம், காதலி தன்னை திருமணம் செய்துகொள்ள கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அஜித் குமார் மறுப்பு தெரிவிக்கவே, உன்னை நான் திருமணம் செய்யமாட்டேன். விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்து புதைத்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய பெண்மணி, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை உறுதியாகவே, அஜித் குமாரை கைது செய்த காவல் துறையினர் வேலூர் சிறையில் அடைத்தனர்.