மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் படத்தை பற்றி மதுரை ஆதீனம் சொன்ன ஒற்றை வார்த்தை.! கொந்தளித்து விஜய் ரசிகர்கள் விடுத்த எச்சரிக்கை.!
மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதினம் பேசுகையில், அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள் என மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
மேலும் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார் எனவும் பேசினார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரை ஆதினத்தின் பேச்சை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் சுவரொட்டிகளை ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா!!!
வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து!!! எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை!! தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை!!! என்றும் குறிப்பிட்டுள்ளது.