மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் மாமியாருடன் கள்ளக்காதல்; 26 முறை சுத்தியால் கொடூரமாக தாக்கி நடந்த சம்பவம்.. விழுப்புரத்தில் பயங்கரம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 26). அப்பகுதியில் வசித்து வருபவர் கெளதம் (வயது 22). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.
கடந்த 19ம் தேதி இரவு நேரத்தில் கோபியின் வீட்டிற்கு கெளதம் வருகைதந்த நிலையில், கெளதம் அவரை சுத்தியால் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் நிலைகுலைந்துபோன கோபி, வீட்டின் வாசலில் மயங்கி விழுந்தார்.
சம்பவத்திற்கு பின் கெளதம் தப்பி சென்றுவிட, அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கொலையை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கோபி உயிருக்கு போராடுவதை உறுதி செய்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தினர்.
விசாரணையில், கௌதமின் மாமியார் சசிகலா (வயது 40). கோபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், விஷயம் கௌதமுக்கு தெரியவந்துள்ளது. அவர் பலமுறை கோபியை எச்சரித்தும் பலன் இல்லை. இதனையடுத்து, ஆத்திரமடைந்த கெளதம், கோபியை கொலை செய்ய சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
விசாரணை முன்னெடுப்பின் போதே கெளதம் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரின் மீது ஆரோவில் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ததால், ஆரோவில் காவல் துறையினரிடம் கெளதம் ஒப்படைக்கப்பட்டார்.
கோபி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டதட்ட 26 முறை சுத்தியலால் கோபி தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.