மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முயல் வேட்டைக்கு செல்கையில் சோகம்... மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் 3 பேர் துள்ளத்துடிக்க மரணம்.! நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!
காட்டுப்பன்றியை ஒழிக்க வைத்த மின்வேலியில் சிக்கி, ஒரே கிராமத்தை சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், வன்னிப்பேர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் முருகதாஸ் (வயது 45), வெங்கடேசன் (வயது 44), சுப்பிரமணி (வயது 38). இவர்கள் மூவரும் இரவு வேளைகளில் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதன்படி, நேற்று இரவில் மூவரும் வேட்டைக்கு சென்றுள்ளனர்.
இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் வயல்வெளிகளில் அதிகம் என்பதால், விவசாயிகள் தங்களது நிலத்தை பாதுகாக்க வேலிகள் அமைத்துள்ளனர். சிலர் மின்வேலியை ஆய்துள்ளார்கள். சம்பவத்தன்று, விவசாயி பத்மநாபன் என்பவரின் நிலத்தில் பயன்பாட்டில் இருந்த மின்வேலியின் உண்மை தெரியாமல் மூவரும் சென்றுள்ளனர்.
அப்போது, வெங்கடேசன், முருகதாஸ், சுப்பிரமணி ஆகியோர் மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை நேரத்தில் அவ்வழியே சென்ற விவசாயிகள் மூவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயியை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.