மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9-ம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம்.. குடிகார தந்தை போதையில் உறங்க, ஆளுக்கு ஒருநாள் என பயங்கரம்.! உயிரை மாய்த்த பரிதாபம்.!!
குடிகார தந்தைக்கு சாராயம் வாங்கிக்கொடுத்து உறங்கவைத்து, அவரின் மகளை 2 பேர் வெவ்வேறு சூழ்நிலையில் அத்துமீறிய பயங்கரம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம், கந்தாடு கிராமத்தில் வசித்து வருபவர் பிரதாப் (வயது 22). இதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவி வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், பிரதாப் சிறுமியிடம் காதலிப்பதாக நடித்து காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான்.
சிறுமியின் தந்தைக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், புதுச்சேரி சாராயத்தை வாங்கி வர பிரதாப் உறுதுணையாக இருந்துள்ளார். மாணவியின் தந்தைக்கு சாராயத்தை வழங்கும் பிரதாப், அவர் மயங்கியதும் சிறுமியை காதல் பெயரில் பலாத்காரம் செய்துள்ளார்.
இவ்வாறாக பல நாட்கள் சிறுமி சீரழிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரம் பிரதாப்பின் நண்பரான கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த புவனேஷ் (வயது 21) என்பவனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மாணவியிடம் அன்புடன் பழகுவதை போல நடித்த புவனேஷும் சிறுமியை சீரழிக்க திட்டமிட்டு காத்திருந்துள்ளார். சிறுமியும் புவனேஷின் போலியான அன்பில் கரைந்துள்ளார்.
சம்பவத்தன்று, புவனேஷ் சிறுமியின் தந்தைக்கு சாராயத்தை வாங்கிக்கொடுக்க, அவர் போதையில் மயங்கியதும் காமுகன் சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். கடந்த சில நாட்களாகவே வாலிபர்கள் ஆளுக்கு ஒருநாள் என தனித்தனியே வந்து செல்வது ஊராருக்கு தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்து மனமுடைந்து போன சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காலையில் போதை தெளிந்ததும் மகள் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் பல பரபரப்பு தகவல் வெளியானது.
அதாவது, சிறுமியின் தாய் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை குடிகாரன் என்பதால், சிறுமி பாசத்திற்காக ஏங்கி தவித்துள்ளார். இதனை பயன்படுத்திய பிரதாப் சிறுமியிடம் காதலிப்பதாக நடித்து அத்துமீற, இந்த விஷயம் அறிந்த புவனேஷும் சிறுமியை சீரழித்துள்ளான். சிறுமியின் தற்கொலை செய்தியை அறிந்த இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், இவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.