பெட்ரோல் போடுவதுபோல வந்த மர்மநபர்கள்.. பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.



Vilupram petrol bunk robbery viral cctv video

பெட்ரோல் போடுவதுபோல் நடித்து பெட்ரோல் பங்கில் இருந்து 36 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுச்சேரி செல்லும் சாலையிலுள்ள பெட்ரோல் பங்கு ஒன்றிற்கு மர்மநபர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனம் ஒன்றில் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளனர். அப்போது பைக்கில் இருந்த ஒருவன் பெட்ரோல் போடும் நபரிடம் 500 ரூபாய் நோட்டை நீட்டி பெட்ரோல் போடும்படி கூறியுள்ளான்.

இதனை அடுத்து ஊழியர் சுரேஷ் என்பவர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த, அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது பையில் இருந்த ரூபாய் 36 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த நபர் கொள்ளையடித்துச்சென்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல், பைக்கில் வந்த மற்றொரு நபர் கேசியர் அறையிலிருந்த செந்தில் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த காஸ்ட்ச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Credits: polimernews.com