மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிக்கு முன்பு விளையாடிய குழந்தைகள் கடத்தல் முயற்சி: விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, சின்னகட்டங்குடி பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.
இன்று காலை 08:30 மணிக்கு குழந்தைகள் பள்ளிக்கு வந்து வெளியே நின்று விளையாடியாக தெரியவருகிறது. அச்சமயம், இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக குழந்தைகளிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
ஆட்கள் நடமாட்டம் குறைந்தபோது, மர்ம நபர்கள் 7 வயதுடைய மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகளை இறுக்கிப்பிடித்து, மயக்க ஸ்ப்ரே அடித்து சாக்கு மூட்டைக்குள் திணித்து கடத்த முயற்சித்துள்ளனர்.
பதறிப்போன பிற குழந்தைகள் அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரை கும்பலை கண்டித்தவாறு விரைந்துள்ளனர். இதனைக்கண்ட இருவரும் சிக்கினால் நம்மை அடித்து நொறுக்கிவிடுவார்கள் என பயந்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், மர்ம கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.