மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சபாஷ்.. சரியான பாடம்.. சிறுமியை கர்ப்பமாகிய வாலிபருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கி நீதிமன்றம்.!
திருப்பூரில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் இது பற்றி விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி கூறியதாவது அவரது வீட்டின் அருகே வசிக்கும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் பேரில் ஜெயராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி பாலு சிறுமியை பலாத்காரம் செய்த ஜெயராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.