என்னது இது பிரேக் இல்ல ஆக்சிலேட்டரா.. கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான BMW கார்..!



what-is-this-brake-or-accelerator-bmw-car-that-lost-con

சென்னை ஆர்.எ.புரம் எம்.ஆர்.சி நகரில் வசித்து வருபவர் விபுஸ் என்ற இளைஞர். இவர் தினமும் அருகில் இருக்கும் இறகு பந்து விளையாடும் மைதானத்திற்கு சென்று விளையாடிவிட்டு வீடு திரும்புவார். 

அவ்வாறு இன்று இறகு பந்து விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் எதிர்பாராத விதமாக தான் ஓட்டி வந்த BMW காரில் பிரேக் என்று நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.

accident

இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக விபுஸ் உயிர் தப்பினார். இதனையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.