மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு ரூமில் தாய், மற்றொரு ரூமில் மகள்..! தனி தனியே காதலர்களுடன் கொஞ்சல்..! மனமுடைந்து தூக்கில் தொங்கிய குடும்பத்தலைவன்.!
தங்கள் டிக்டாக் காதலர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த கனகவள்ளி டிக் டாக் வீடியோ செய்வதில் ஆர்வமாகி அதற்கு அடிமையாகி உள்ளார். என்னரும் பார்த்தாலும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்த இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அதேநேரம் அவரது 17 வயது மகளும் டிக் டாக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தாய் மற்றும் மகள் இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தங்கள் காதலர்களுடன் செல்போனில் பேசி வந்ததை பார்த்த ரவி இதுகுறித்து இருவரையும் கண்டித்துள்ளார்.
ரவி தங்களை கண்டிப்பதை பிடிக்காத அவரது மகள் மற்றும் மனைவி இருவரும் தத்தம் காதலர்களுடன் சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி உள்ளனர். மனைவி மற்றும் மகளை காணவில்லை என ரவி கொடுத்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கனகவல்லி மற்றும் அவரது மகளை ஈரோட்டில் கண்டுபிடித்து அவர்களை மீட்டு ரவியிடம் ஒப்படைத்தனர்.
ஆனாலும் காதலர்களை மறக்காத அவர்கள் மீண்டு சில மாதங்களில் தங்கள் காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தமுறை தமது மகள் மற்றும் மனைவியிடம் ரவி போனில் சமாதானம் பேசியும் எந்த பலனும் இல்லை. நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என மகளும் அவரது மனைவியும் கூறியதை கேட்டு மனம் நொந்துபோன ரவி தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்று உள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு தனது சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துவிட்டு, ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டிக் செயலியை தவறான முறையில் பயன்படுத்திய தாய் மற்றும் மகளால் குடும்ப தலைவன் தற்கொலை செய்துகொண்டதும், 15 வயது சிறுவன் அனாதை ஆன சம்பவமும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.