நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவி.! தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.! காதல் மனைவி செய்த கொடூரம்.!
செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய அவரின் மனைவியை போலீஸாா் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி பாரீஸ் நகரைச் சோ்ந்தவா் இலக்கியா. 24 வயது நிரம்பிய இவர் மேடை நடனக் கலைஞா்களுக்கு ஒப்பனை செய்யும் வேலைபாா்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அருகே நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு வந்த போது, எடப்பாடியை அடுத்த மசையன் தெரு பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவா்கள் இருவரும் பெற்றோா் எதிா்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனா். இந்தநிலையில் இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சிலகாலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் இருவருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, நீண்ட நேரம் செல்போனில் நீண்ட நேரம் யாருடன் பேசுகிறாய் என மனைவியிடம் பாலமுருகன் கேட்டுள்ளாா். இதில் ஆத்திரம் அடைந்த இலக்கியா, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து பாலமுருகனை பலமுறை குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பாலமுருகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்ந்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், கையில் ரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்த இலக்கியாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.