மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனுக்காக கடன் வாங்கிக் கொடுத்த மனைவி! வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்!
திருப்பூரில் புதிய தொழில் துவங்குவதாக கூறி, மனைவியிடம் பணம் வாங்கிய கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு அன்ன பூரணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்னபூரணி தனது கணவன் புதிய தொழில் துவங்குவதாக கூறியதால், அவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை வாங்கிய கணவன் புதிய தொழில் எதுவும் துவங்காமல், அதே ஊரைச் சேர்ந்த மீனா குமாரி என்ற இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் எனது கணவருக்கு வாங்கிக்கொடுத்த கடன் தொகையை தனியார் நிதி நிறுவனம் என்னிடம் கேட்டு வருகிறார்கள். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.