மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதல் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு கணவன் மாமியாரின் கதைமுடித்த கொடூரமனைவி.. பதறவைக்கும் செயலால் தமிழகமே அதிர்ச்சி..!
கள்ளக்காதலனுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பணத்தேவை ஏற்பட்டதால், மனைவியே தனது கணவனையும், மாமியாரையும் படுகொலை செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென நேற்று காலை செல்வராஜ் மற்றும் அவரது தாயார் சௌந்தர்யம்மாள் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எரியோடு காவல்துறையினர் தாய்-மகன் ஆகிய இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொடூரமான கொலை தொடர்பாக 5 தனிப்படைகளை அமைத்த காவல்துறையினர் கொலையாளிகளை மிக தீவிரமாக தேடி வந்தனர். அப்போது செல்வராஜின் மனைவி சுகாசினி மீது சந்தேகம் வந்த நிலையில், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுஹாசினி அதே பகுதியில் வசித்து வந்த கோபி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணத்தேவை ஏற்பட்டதால், தனது கணவர் செல்வராஜ் மற்றும் மாமியார் சௌந்தர்யம்மாள் இருவரையும் கொலை செய்தால், அனைத்து சொத்துகளையும் சுருட்டிக்கொண்டு, அதனை விற்றுவிடலாம்.
அத்துடன் தங்களுக்கு தேவையான பணம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் படுகொலை செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக தனது சொந்த கணவன் மற்றும் மாமியாரை பெண் கொலை செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.