மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் தகராறு செய்த கணவர்... தந்தையுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி... தந்தை மற்றும் மகள் கைது.!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே போதையில் தகராறு செய்த கணவனை அவரது மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மனைவி மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திடீர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(39). வெல்டிங் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி சந்தியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இராமமூர்த்தி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமை செய்து இருக்கிறார். மேலும் தினமும் வேலைக்கு சென்று வரும் பணத்தையும் குடித்து அடித்துள்ளார்.
இதனால் இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி சந்தியா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நெய்வேலியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மதியம் மனைவியை அழைத்து வருவதற்காக அவரது தந்தை வீட்டிற்கு சென்று இருக்கிறார் ராமமூர்த்தி. அப்போதும் மது போதையிலேயே சென்றுள்ளார். இவர் அழைத்ததற்கு அவரது மனைவி சந்தியா வர மறுத்ததால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது தடுக்க வந்த சந்தியாவின் தந்தையை ராமமூர்த்தி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தியா மற்றும் அவரது தந்த இருவரும் சேர்த்து கயிறால் கழுத்தை இறுக்கி ராமமூர்த்தியை கொலை செய்துள்ளனர். அவர் இறந்ததை தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். ராமமூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் தப்பி ஓடிய ராமமூர்த்தியின் மனைவி சந்தியா மற்றும் அவரது தந்தையை இன்று அதிகாலை கைது செய்துள்ளது.