அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கோபத்தில் சென்று இருக்கிறார் வீடு திரும்பி விடுவார்.... உறவினர்களை பதற வைத்த மின்வாரிய ஊழியரின் முடிவு.!
குடும்பத் தகராறில் மின்சார வாரிய ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் முருகப்பெருமாள்(49), இவர் தமிழக மின்சார வாரியத்தில் அவரை குலத்திற்கு உட்பட்ட பெருங்குடியில் வயர் மேனாக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் . இந்நிலையில் நேற்று மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று காலை ஆரல்வாய்மொழி புனங்குடி ரயில் பாதையில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் முருகப்பெருமாள் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்ற முருகப்பெருமாள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. கோபத்தில் எங்காவது அருகில் தான் சென்றிருப்பார் சிறிது நேரத்தில் வீடு திரும்பி விடுவார் என்று காத்திருந்த அவரது குடும்பத்தினருக்கு தற்கொலை செய்து கொண்ட செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.