மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குப்பை போடுவதற்கெல்லாம் அடிதடியா.?... பெண் தாக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது.!
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் அருகே வீட்டுப் பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பான தகராறில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தமர்சீவி தெருவில் வசித்து வருபவர்கள் சொர்ணா தேவி மற்றும் வசந்தா, உறவினர்களான இவர்கள் இருவரது வீடும் அருகருகே அமைந்திருக்கிறது. வீட்டு அருகே குப்பை கொட்டுவது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்றும் குப்பை கொட்டுவது தொடர்பாக வசந்தா மற்றும் சொர்ணா தேவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது வசந்தா அவரது குடும்பத்தைச் சேர்ந்த நவநீதன் மற்றும் முருகானந்தம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சொர்ணா தேவியை தாக்கி இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து வசந்தா, முருகானந்தம் மற்றும் நவநீதனை கைது செய்துள்ளது,