அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
சிலிண்டரில் தீ வைத்து, படுக்கையறையில் தாய் செய்த காரியம்! துடித்துடித்து உயிரிழந்த இரு பச்சிளங்குழந்தைகள்!! துயர சம்பவம்!!
புது வண்ணாரப்பேட்டையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிலிண்டருக்கு தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹன்சூர். 40 வயது நிறைந்த இவர் சென்னை மணலியில் சின்னசேக்காடு பகுதியில் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி ரிம்ஜம் மற்றும் இவர்களுக்கு 4 வயது மற்றும் 8 மாதங்களில் இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரிம்ஜம் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கேஸ் சிலிண்டரை தனது படுக்கை அறைக்கு கொண்டுவந்து அங்கு தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில் அவர்களது இரு குழந்தைகளும் தீவிபத்தில் சிக்கினர். இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூவரையும் மீட்டுள்ளனர்.
பின்னர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். ரிம்ஜம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.