மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்க கலக்கத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கிய பெண்! ரயிலின் அடியில் சிக்கி கொண்ட பரிதாபம்!
மதுரையில் அனந்தபுரி ரயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.இதன்பின் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கேரளாவிலிருந்து சென்னைக்கு வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ரயிலில் பயணம் செய்த பூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் நடந்து சென்று ரயில் பெட்டியில் இருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார். ரயில் மதுரை நிலையத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது தவறிவிழுந்த பூர்ணிமா ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர். தொடர்ந்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.
பூர்ணிமா கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அந்த வழியே செல்ல வேண்டிய மற்ற ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.
அங்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில்களில் இருந்த பயணிகளும் தங்களது ஊருக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.