சிங்கப்பெண்ணே.. பேச்சு மூச்சின்றி கிடந்த இளைஞன்! மின்னலாக பெண் காவல் ஆய்வாளர் செய்த தரமான காரியம்! வைரல் வீடியோ!!



Women inspector lifting unconsicious youngman video viral

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. மேலும் சென்னையில் பல பகுதிகள் கடுமையான மழையால் வெள்ளக்காடாக மாறியது. மேலும் பலத்த காற்று வீசி ஆங்காங்கு மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை, போக்குவரத்து போன்றவை பாதிக்கப்பட்டு, பெருமளவில் அவதிப்பட்டனர். 

இந்நிலையில் சென்னை டிபி சத்திரம் பகுதியில் அமைந்துள்ள கல்லறை  பகுதியில் பலத்த புயல் காற்றால் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் பலரும் சிக்கிய நிலையில், இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தனது உடன் பணிபுரியும் காவலர்களுடன்  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

அங்கு மரம் விழுந்ததில் மயங்கிய நிலையில் மூச்சுப்பேச்சின்றி வெள்ளநீரில் ஊறியவாறு இளைஞர் ஒருவர் கிடந்துள்ளார். அவரை கண்ட ராஜேஸ்வரி அவர்கள் அந்த இளைஞரை தனது தோளில் தூக்கிப்போட்டு கொண்டு, ஒரு ஆட்டோவில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.  இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் உண்மையான சிங்கப்பெண் என பாராட்டி வருகின்றனர்.