மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலுவலகத்தில் தொடர் பாலியல் தொல்லை! விஷம் குடித்து வீடியோ வெளியிட்ட பெண்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை கார்த்திகா என்ற பெண் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஷோரூமில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் 3 ஆன் ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு பேர் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
கார்த்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் கணவர் இருக்கும் நிலையில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனால் வேதனையடைந்த கார்த்திகா தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடன் பணியாற்றும் ஊழியர்களான அமுதா, வைரவன், சபரி, செபாஸ்டின் ஆகிய நான்குபேரும் சேர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். என்னை அவர்களின் ஆசைக்கு இணங்கு, அவ்வாறு இணங்கினால் நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் சென்று விடலாம் என்று கூறி மிரட்டுகிறார் ஒரு பெண்.
மேலும், எனது கணவருக்கு போன் செய்த அமுதா, எனக்கு முறையற்ற பழக்கம் நிறைய ஆண்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் மன வேதனையில் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த வீடியோவை பகிர்கிறேன் எனவே அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.