மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுவினால் சீரழியும் குடும்பங்கள்.! போதையில் செய்த செயலால் சித்தி இறந்துவிட்டதாக நினைத்து தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.!
தற்போது மது குடிப்பது சமூக அந்தஸ்து என நினைத்து பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர். மதுவுக்கு எதிராக பலர் குரல் எழுப்பியும் தற்போதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை. மதுவினால் பலரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் வந்துவிட்டது. மதுவினால் நாளுக்கு நாள் பல குடும்பங்கள் நாசமாகி வருகிறது. இந்தநிலையில் குடிபோதையில் தாக்கியதில் சித்தி இறந்துவிட்டதாக கருதி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான ரங்கராஜன் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து அவரது தாயாரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சம்பவத்தன்று ரங்கராஜன் குடித்துவிட்டு மதுபோதையில் விட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ரங்கராஜனின் சித்தி ராஜம்மாள் அவரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரங்கராஜன் கீழே கிடந்த கல்லை எடுத்து ராஜம்மாளை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜம்மாள் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தநிலையில், தான் கல்லால் தாக்கியதில் சித்தி இறந்துவிட்டதாக நினைத்த ரங்கராஜன், குடிபோதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரங்கராஜன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.