மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து எரித்து கொன்ற கொடூரன்.! அதிர்ச்சி சம்பவம்.!
தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று அங்கன்வாடியில் அந்த 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த விஜயகுமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் அந்த சிறுமி அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுவன் சிறுமியின் ஆடையில் தீ வைத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் சிறுமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.