மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் காதலியை பார்க்க வீட்டிற்குள் குதித்த காதலன்! ஆழமான கிணற்றில் தவறி விழுந்து போட்ட அலறல் சத்தம்!
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜிலான் என்ற இளைஞன் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஒரகடம் சாலையில் வசிக்கும் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அவர் வரும் வழியில் அவரது காதலியின் வீடு இருப்பதால், நள்ளிரவில் காதலியை பார்க்க அவரது வீட்டுக்குள் சத்தமின்றி நுழைந்துள்ளார். அப்போது யாரோ வரும் சத்தம்கேட்டு பயந்துபோன அவர், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது அங்கு தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
கிணற்றில் தண்ணீரே இல்லாததால் பலத்த காயமடைந்த அவர் அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு காதலி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஓடிவந்தனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, படுகாயம் அடைந்த நிலையில் இருந்த ஜிலானை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.