மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தவர் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம்! கணவனுக்கு தெரிந்ததால் நேர்ந்த விபரீதம்!.
தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாசம். இவர் அப்பகுதியின் பேரூராட்சி வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் அவரின் மனைவி குளோரி என்பவரும் வசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில் குளோரிக்கும், சுரேஷுற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது குளோரிக்கு டிரைவர் பாசத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
இந்த நிலையில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி குளோரி இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு மீண்டும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சுரேஷிற்கும், பாசத்திற்கும் முன்விரோதம் ஏற்பட ஆரம்பித்தது.
இந்த நிலையில் நேற்று காலை பாசம் வழக்கம்போல துப்புரவு பணிக்கு குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குளோரியிடம் பாசம், பாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அவரது தந்தை மற்றும் தம்பி ஆகிய மூவரும் குப்பை அள்ளும் இரும்பு தகடு மற்றும் கத்தியால் பாசத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்த பாசத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.