மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதறும் 9 மாத கை குழந்தை! செல் போனில் பேசிய தாய்க்கு ஏற்பட்ட கொடூர மரணம்!
புதுச்சேரி ஜீவானந்தபுரம் என்னும் பகுதியில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி. 22 வயதாகும் செல்விக்கும், பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
இந்நிலையில் செல்விக்கு குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆகும் நிலையில் குழந்தை நன்கு வளரும் வரை தனது தாய் வீட்டில் இருப்பதாக முடிவு செய்து அதன்படி பாண்டிச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார் செல்வி.
இதனிடையே செல்வியின் கணவர் அவ்வப்போது பாண்டிச்சேரி வந்து தனது மனைவியையும், குழந்தையையும் பார்த்து சென்றுவந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து செல்வி தனது கணவருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது கால் தவறி செல்வி கீழே விழுந்துள்ளார்.
செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.