மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடரும் மர்ம மரணங்கள்.. இளம் பெண் மருத்துவர் மாரடைப்பால் மரணம்.!
சமீப காலமாக இளம் வயதிலேயே மாரடைப்பால் மரணம் ஏற்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்கள், நாடக கலைஞர்கள் போன்ற இளம் வயதினர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட இந்தியா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தததை தாங்கிக் கொள்ள முடியாமல் 2 ரசிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான பெண் மருத்துவர் அன்விதா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.