ஒரே ஒரு புகாரால் தூக்கில் தொங்கிய கணவர்... கதவை திறந்த மனைவி அதிர்ச்சி!! நடந்தது என்ன.?



Young man committed suicide for police investigation

கன்னியாகுமரி மாவட்டம் நாராயணன் புதூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் - குமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ஜெகதீஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். குமாரி நகர்கோவிலில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வேன் டிரைவராக வேலை பார்த்து வரும் ஜெகதீஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்தும், அவருடன் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார் ஜெகதீஷ். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த குமாரி கணவன் குறித்து அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதனை அடுத்து போலீசார் ஜெகதீஷை தொடர்பு கொண்டு உன் மனைவி உன் மீது புகார் கொடுத்துள்ளார் உடனே விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர்.

suicide

இதனால் பயந்து போன ஜெகதீஷ் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குமாரி கணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் ஜெகதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து தான் ஜெகதீஷ் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.