மதுராந்தகம் அருகே பரபரப்பு..  இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை.!



Young man death in maduranthagam

மதுராந்தகம் அருகே இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள குமாரவாடி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே தனியாருக்கு சொந்தமாக வீட்டு மனை உள்ளது. அங்கு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Maduranthagam

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Maduranthagam

இதனையடுத்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.