மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்... தவறான சிகிச்சையால் காலினை இழந்து தவிக்கும் இளைஞர்...
சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் - வேளாங்கண்ணி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பெயிண்டராக வேலை பார்ப்பது வரும் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த பார்க்கிற்கு விளையாடச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக விஜய் கீழே விழுந்துள்ளார். அதில் விஜயின் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து விஜய் ராயப்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது எனவே கட்டுப்போட வேண்டும் என கூறியுள்ளனர்.
அதனால் விஜய் தனது நண்பரின் உதவியுடன் வடபழனியில் இருக்கும் புத்தூர் மாவு கட்டு வைத்தியசாலைக்கு சென்று கட்டு போட்டு உள்ளார். அதனையடுத்து விஜயின் முட்டியில் ரத்தம் கசிந்துள்ளது. இதனால் அச்சமான விஜய் உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு விஜயை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் காலினை அகற்ற வேண்டும் என்று கூறியதை அடுத்து கால் அகற்றப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.