மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிலத்தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்... கதறும் குடும்பத்தினர்!!
அரக்கோணம் அருகே உள்ள நாரணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. விவசாயியான இவருக்கு அதே கிராமத்தில் வசித்து வரும் அவரது சகோதரி மகன் அஜித்துக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக அஜித் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், அரக்கோணம் போலீசார் ஜோதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று வீட்டில் இருந்த ஜோதியிடம், அஜித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார். அதில் ஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.