மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபத்தான இடத்தில் அசால்டாக போஸ் கொடுத்து புகைப்படம்.! கால்தவறி விழுந்தவரின் கதி என்ன?? பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!
புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கும்போது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து நீர் வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் அஜய் பாண்டியன். 28 வயது நிறைந்த அவர் கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி, மங்களம்கொம்பு பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அஜய் பாண்டியன் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் தனது நண்பருடன் குளிக்க சென்றுள்ளார்.
அங்கு பாறைகளில் நின்று அவர் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் ஆபத்தான பாறை சரிவுகளில் நின்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி அவர் அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவலளிக்கபட்ட நிலையில் மாயமான அந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தொடர் மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு போன்ற காரணத்தினால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரின் நிலை என்னாச்சு என பலருக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.