மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவல் நிலையத்தில் கையொப்பமிட வந்த நபர் படுகொலை... திமுக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த கும்பல்... வெறிச்செயல்.!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரை வழிமறித்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
நேற்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து அதற்காக வினீத் என்ற இளைஞர் வந்தார். அப்போது ஸ்கார்பியோ காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரா மாறியாக வெட்டியது. மேலும் இதனை தடுக்க வந்த அவரது நண்பரையும் தாக்கி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வினித் மற்றும் அவரது நண்பரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி வினித் பரிதாபமாக உயிரிழந்தார் அவரது நண்பருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய ஸ்கார்பியோ காரில் வந்த கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காரைக்குடி நாச்சுழியேந்தல் பகுதியில் சொத்துக்காக கூலிப்படை மூலம் தாயே, மகனை கொலை செய்த சம்பவம் நடந்தது. இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டம் திருமோகூரைச் சேர்ந்த வினீத் (வயது 29) நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நீதிமன்ற நிபந்தனையின்படி காவல் நிலையத்தில் கையொப்பம் இடுவதற்காக வந்தபோது ஐந்து பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.