மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிக்கு தாலிகட்டி பாலியல் பலாத்காரம்: 19 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
பள்ளி மாணவிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது 16 வயது மகளை காணவில்லை என்று கடந்த 27 ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுமி மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு இளைஞருடன் வசித்து வருவதாக, சிறுமியின் தந்தைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று மேல்மருவத்தூருக்கு விரைந்து சென்ற பெற்றோர், அந்த வீட்டை கண்டுபிடித்து சிறுமி மற்றும் இளைஞரையும் பிடித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. சம்பந்தப்பட்ட சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் மிளவு அழகன் (19) என்பவருடன் பழகியுள்ளார். அது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னை அண்ணாநகரில் உள்ள விநாயகர் கோவிலில் அந்த வாலிபர் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை கண்ட அவரது பெற்றோர் சிறுமியை கடுமையாக எச்சரித்துள்ளனர்இதற்கு பிறகு இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி மேல்வருவத்தூரில் தங்கி கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மிளவு அழகன் மீது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது, சிறுமியை கட்டாய திருமணம் செய்தது மற்றும் பலாத்காரம் செய்தது ஆகிய குற்றத்திற்காக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.