மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக் பாரில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர்...!! திருச்சியில் பயங்கர சம்பவம்...!!
சமயபுரம் அருகே இருக்கும் சேனியகல்லுக்குடியை சேர்ந்த பாபு (28), பூக்கடையில் மாலை கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இருக்கும் பார் ஒன்றில் மதுபானம் குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பாரில் மது அருந்திக் கொண்டிருந்த சிலருக்கும், பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கும்பல் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாபுவை சரமாரியாக வெட்டினர்.
இதில் உயிருக்கு போராடிய பாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பாபு, வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக சமயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்தபகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாபுவிற்கும், இந்த கொலை சம்பவத்தை செய்தவர்களுக்கும் இடையே, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச்செல்வதில் கடந்த சில தினங்களாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.
இருந்த போதிலும், காவல்துறையினர் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.