மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே... நாய் துரத்தியதால் மூதாட்டியை தாக்கிய இளைஞர்கள்... காவல்துறை விசாரணையில் 3 பேர் கைது.!
திருச்சி மாவட்டம் பூமாலைபுரத்தில் நாய் குறைத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூமாலைபுரத்தைச் சேர்ந்தவர் அபிஷேக்(20) இவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குரைத்து கொண்டே இவரை துரத்தி இருக்கிறது. இது தொடர்பாக அபிஷேக் தனது நண்பர்கள் ஆன அரவிந்த் மற்றும் குமாருடன் சென்று நாயை வளர்த்து வரும் செல்லம்மாள்(65) என்ற வயது முதிர்ந்த மூதாட்டி இடம் தகராறு செய்திருக்கிறார்.
வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் அபிஷேக் மற்றும் அவரது நண்பர்கள் மூதாட்டியை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மையாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக செல்லம்மாள் அளித்த புகாரை தொடர்ந்து முசிறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அபிஷேக் மற்றும் அவரது நண்பர்களான அரவிந்த், குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.