வெறும் நான்கு நிமிடத்தில் உங்க போன் புல் சார்ஜ் ஆகணுமா? இந்த செய்தியை படிங்க..



4-minutes-charging-introduced-by-real-me-in-tamil

வெறும் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் உங்கள் போனை சார்ஜ் செய்ய முடியும் என்ற அசாத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.

சீனாவை சேர்ந்த பிரபல மொபைல் தயாரிக்கும் நிறுவனம் ரியல்மி சீனா, இந்தியா உட்பட பல்வேரு நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது உலகின் அதிவேகமான சார்ஜரை அறிமுகம் செய்திருக்கிறது.

Real me

கடந்த ஆண்டு GT 3 அறிமுகத்துடன் 240 W சார்ஜிங்கை கொண்டுவந்த முதல் பிராண்டுகளில் ரியல்மியும் ஒன்றாகும். இந்நிலையில் 320 வாட் சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ரியல்மி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் எந்த வகை தொலைபேசியுடன் இயங்கும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

320 வாட் சூப்பர்சோனிக் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 320 வாட் சூப்பர்சோனிக் பாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் மூலம் 4,420 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் சார்ஜ் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது.