பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
ஸ்மார்ட் டிவிக்காக அதிகமா செலவு பண்றீங்களா?.. வெறும் ரூ.9000-த்தில் அசத்தல் ஸ்மார்ட் டிவிகளின் லிஸ்ட் இதோ..!
புதிய ஸ்மார்ட் டிவி வாங்க ஆசைப்பட்டாலும் அதன் பட்ஜெட் காரணமாக வாங்கலாமா? வேண்டாமா? என்று யோசனையில் இருக்கலாம். தற்போது நமது வீட்டில் இருக்கும் பழைய டிவியை கொடுத்துவிட்டு மாற்றி வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.
சிலர் குறைந்த விலையிலான ஸ்மார்ட் டிவியும் பரிந்துரை செய்வார்கள். இன்றுள்ள போட்டி யுகத்தில் ஸ்மார்ட் டிவி நிறுவனங்களும் பல வந்துவிட்டதால் அதன் விலையும் குறைந்து வருகின்றன. திரையரங்கு போல வீட்டில் இருந்தபடி டிவி பார்க்க பலரும் அதனை விரும்புகிறார்கள்.
பிலிப்கார்ட் நிறுவனத்தில் Thomson 9A Series (30 inch) HD Ready LED Smart Android tv-யை 34% தள்ளுபடியில் வாடிக்கையாளர்களுக்காக ரூ.14,499-லிருந்து வெறும் ரூ.9, 449-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.8,700 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரியல் மி நிறுவனத்தின் 32 inch HD Ready LED Smart Android tv ரூ.17,999-க்கு பதில் ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.11,000 விலையில் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு வருட உத்தரவாதம் போன்றவையும் இதற்கு இருக்கிறது.
மேலும் ஏசர் 32 inch Ready LED Smart Android ரூ.19,990-க்கு பதில் 39% தள்ளுபடியுடன் ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் இந்த டிவியினை ரூ.7,000 தள்ளுபடியில் வாங்கலாம்.