மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மற்றவருக்குத் தெரியாமல் வாட்ஸ் அப்பில் அதனை செய்ய வேண்டுமா! அதற்கான எளிய வழிமுறைகள்
வாட்சப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதிலிருந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கித் தருவது தான்.
மேலும் வாட்ஸ்அப்பில் பல பிரைவசி மற்றும் செக்யூரிட்டி வசதிகள் உள்ளன. குறிப்பாக வாட்சப் ஸ்டேட்டசினை நமது காண்ட்ராக்டில் இருப்பவர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. மேலும் யார் யாரெல்லாம் நமது ஸ்டேட்டஸை பார்த்துள்ளார்கள் என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதே சமயம் நாம் மற்றவருக்குத் தெரியாமல் எப்படி அவருடைய வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்க முடியும் என்ற நுணுக்கமும் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு முதலில் வாட்ஸப்பில் உள்ள read recipients வசதி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வசதி மூலம் ஒருவர் நாம் அனுப்பிய மெசேஜ்களை படித்துவிட்டாரா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை நாம் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் நமது மெசேஜை படித்து விட்டால் 2 ஊதா நிறத் டிக் மார்க் தெரியும். இல்லையெனில் மற்றவர் நமது மெசேஜ்களை படித்துவிட்டாரா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. வெறுமனே டிக் மார்க் மட்டுமே இருக்கும்.
இப்பொழுது இதே வசதியானது ஒருவருடைய வாட்சப் ஸ்டேட்டசினை அவருக்குத் தெரியாமலேயே பார்ப்பதற்கு பயன்படுகிறது. பொதுவாக வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளவர் தன்னுடைய ஸ்டேட்டசினை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம். ஆனால் இந்த புதிய நுணுக்கத்தின் மூலம் மற்றவருக்கு தெரியாமலேயே அவர்களுடைய வாட்சப் ஸ்டேட்டசினை நம்மால் பார்க்க முடியும்.
இதற்கு நீங்கள் ஒருவருடைய ஸ்டேட்டசினை பார்ப்பதற்கு முன்பு உங்கள் செட்டிங்ஸில் உள்ள read recipients வசதியை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு சென்று அவருடைய ஸ்டேட்டஸை பார்த்தால் அந்த ஸ்டேட்டஸ் வைத்திருக்கும் நபருக்கு பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயரை காட்டாது. பின்னர் மீண்டும் வந்து read recipients வசதியை இயக்கிக் கொள்ளலாம்.
ஆனால் தற்பொழுது இந்த வசதியினை வாட்சப் நிறுவனம் சரி செய்துள்ளதாக தெரிகிறது. எனவே நீங்கள் இவ்வாறு ஒருவருடைய ஸ்டேட்டசினை அவருக்கு தெரியாமல் பார்க்க வேண்டுமென்றால் இதேபோல் பார்த்துவிட்டு அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்களது read recipients வசதியை ஆன் செய்யாமல் இருக்க வேண்டும்.