தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்து விட்டீர்களா.?! உடனே இதை செய்யுங்கள்.!
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடக்க இருக்கிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டையானது வழங்கப்படுகிறது.
ஒருவேளை எவரேனும் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்து விட்டால் அவர்கள் வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை என்னை வைத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். (EPIC - Electors Photo Identification Card)
ஆன்லைன் மூலமாக எப்படி (EPIC - Electors Photo Identification Card) நம்பரை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும். அதில் ‘Search by details’ என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக உங்களுக்கான ஆப்ஷனை தேடி அதை தேர்ந்தெடுத்து தகவல்களை உள்ளிடவும். அடுத்தது கேப்சா கோடை(captcha code) என்டர் செய்து சர்ச் (Search) கொடுக்கவும். இப்போது உங்கள் பெயர் காண்பிக்கப்படும். அதில் ‘View Details’ கொடுத்தால் உங்களுடைய EPIC நம்பர் உட்பட மற்ற அனைத்து தகவல்களும் அதில் இருக்கும்.