ஏழரை சனி எச்.ராஜா - அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்.!



Minister PK Sekar Babu on H Raja 20 March 2025 


கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு மாநில பாஜக சார்பில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டியும், டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பும் பாஜக போராட்டம் நடத்த ஆயத்தமானது. 

திமுக - பாஜக மோதல்

பின் அனுமதி இன்றி போராட்டம் நடத்த முன்வந்ததாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு பின் விடுவிக்கப்பட்டனர். இதனால் பாஜக - திமுக இடையே கருத்து மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

இதையும் படிங்க: கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவரையெல்லாம் - அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த சேகர் பாபு.!

சேகர் பாபு பேட்டி:
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் & சென்னை வளர்ச்சிக்குழும தலைவர் பிகே சேகர் பாபு, "அப்பாவிகளை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி அண்ணாமலை மற்றும் பாஜக கட்சியினர் செய்து வருகின்றனர். 

பிரித்தாளும் சூழ்ச்சி

அக்கட்சிக்கு இருக்கும் எச்.ராஜா ஏழரை சனி. சனிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கின்றனர். அவர்களின் சூழ்ச்சியை திமுக அரசு வெல்லும். திமுக அரசு எப்போதும் மக்களின் பக்கம் இருக்கும். மதத்தால் மக்களை பார்த்தாலும் சூழ்ச்சியை திமுக அரசு வேடிக்கை பார்க்கும் என நினைக்க வேண்டாம்" என கூறினார்.
 

இதையும் படிங்க: JustIN: "நாய் ஏத்துற வண்டியில் நான் ஏறமாட்டேன்" - பாஜக எச். ராஜா டென்ஷன்.!